1 ரூபாய் ஜெராக்ஸ் போட்டுவிட்டு 20 ஆயிரம் ரூபாய் செல்போனை லாபகமாக எடுத்துச் சென்ற கொள்ளையன்..!

1 ரூபாய் ஜெராக்ஸ் போட்டுவிட்டு 20 ஆயிரம் ரூபாய் செல்போனை லாபகமாக எடுத்துச் சென்ற கொள்ளையன்..!

கள்ளக்குறிச்சியில் ஒரு ரூபாய் கொடுத்து ஜெராக்ஸ் போட்டுவிட்டு 20 ஆயிரம் ரூபாய் செல்போனை லாபகமாக எடுத்துச் சென்ற கொள்ளையன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி நகரில் உலகப்ப செட்டி கொள்ளை தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் ஏமப்பேரில் பாலா கம்ப்யூட்டர்ஸ் என்ற பெயரில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது கடைக்கு வந்த ஒருவர் ஜெராக்ஸ் போட வந்தார். ஒரு பேப்பரை கொடுத்து ஜெராக்ஸ் போட கூறியுள்ளார்.

கடை ஊழியர் ஜெராக்ஸ் மிஷினிடம் சென்று ஜெராக்ஸ் போட்டுக் கொண்டிருக்கும்போது அந்த நபர் கடையில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை லாபமாக எடுத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து தப்பியுள்ளார். 

இது குறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக பாலசுப்ரமணியன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.