ஆன்லைன் கேம் மூலம் ரூ. 42,000 மோசடி.. சிறுவனை ஏமாற்றி பணம் பறித்த நபர்!!

ஆன்லைன் கேம் மோசடியில் யார் ஈடுபட்டாலும்  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஆன்லைன் கேம் மூலம் ரூ. 42,000 மோசடி.. சிறுவனை ஏமாற்றி பணம் பறித்த நபர்!!

மதுரை மாவட்டம் கடல் குளத்தை சேர்ந்த சிறுவன் மோகன சுந்தரம். 7-ம் வகுப்பு படித்து வரும் இவர் ப்ரீ-பயர் கேம் விளையாட்டில் ஆர்வமா இருந்துள்ளார்.

இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டில் கடந்த 3 மாதங்களாக வங்கி கணக்கு மூலம் 17 ஆயிரம் ரூபாயும், நேரில் சந்தித்து 25 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 42,000 ஏமாற்றி சிலர் பணம் பறித்து உள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்த தல்லாகுளம் காவல் துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து சிறுவனிடம் இருந்து ஏமாற்றி பெற்ற பணத்தையும் மீட்டுத்தரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருவதாக கூறினார்.

எனவே இணையத்தில் பழகும் சிறுவர்களை  பெற்றோர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி ஆணையர், ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்களை ஏமாற்றும் நபர்கள் பற்றிய விவரம் தெரிந்தால், உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றார்.