பலே ப்ளான் போட்ட ஐ.டி அதிகாரியின் கார் ஓட்டுநர்! தற்போது கம்பி எண்ணும் பரிதாபம்!!

வருமான வரித்துறை அதிகாரியின் காரை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 14 கிலோ கஞ்சா,  கார் பறிமுதல், தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை சூளைமேடு பகுதியில் போலீசார் வாகனசோதனையின் பொழுது வருமான துறை ஆணையரின் போர்டு வைத்த காரில் பயணம் செய்த மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபொழுது தப்பியோடி உள்ளார். போலீசார் மீதமுள்ள இருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் கொரட்டூரை சேர்ந்த வாணி என்ற பெண், முருகன் என்பதும் தெரியவந்தது.

மேலும் தப்பியோடியது பிரகாஷ் என்பதும்,  தனது கணவர் பெசன்ட் நகரில் உள்ள வருமான வரித்துறை அதிகாரியிடம் கார் ஓட்டுனராக பணியாற்றி வருவதாகவும்,  அவர் பழனி கோவிலுக்கு சென்றுள்ளதால் அவரது காரை பயன்படுத்தி கஞ்சா வியபாரம் செய்ததாகவும் தெரிவித்ததை அடுத்து கொரட்டூரில் உள்ள வாணி வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்ட பொழுது 14 கிலோ கஞ்சாவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.