சேலத்தில் கொடிகட்டி பறக்கும் லாட்டரி விற்பனை; நடவடிக்கை எடுக்குமா காவல்துறை!

சேலத்தில் கொடிகட்டி பறக்கும் லாட்டரி விற்பனை; நடவடிக்கை எடுக்குமா காவல்துறை!

சேலம் மாநகர் கருங்கல்பட்டி, களரம்பட்டி ஆகிய பகுதிகளில் கேரளா லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்சி உள்ளனர்.

சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருங்கல்பட்டி, களரம்பட்டி ஆகிய பகுதிகளில் டீக்கடை மற்றும் உணவகங்களில் லாட்டரி விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதுபோன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எந்தவித அச்சமும் இன்றி தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக களரம்பட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரை லாட்டரி விற்பனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே போல் அப்பகுதியை சுற்றியுள்ள டீக்கடைகளில் எந்தவித அச்சமும் இன்றி லாட்டரி விற்பனையானது நடைபெறுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. எனவே சேலம் மாநகர போலீசார் சட்ட விரோத லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க:"தமிழ்நாட்டில் மத கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயல்கிறது" செல்வபெருந்தகை குற்றச்சாட்டு!