அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சங்களில் மோசடி: நிபந்தனையுடன் ஜாமீன்...!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சங்களில்  மோசடி:  நிபந்தனையுடன் ஜாமீன்...!

கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 14 லட்சம் மோசடி செய்த  வழக்கில் இரண்டு பேருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

2018ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.14 லட்சம் பணம் பெற்ற வழக்கில் சுதா, ஷர்மிளா இருவருக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.

கரூர் மாவட்டத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 2018 ஆம் ஆண்டு செந்தில், அவரது மனைவி சங்கீதா இடம் ரூ.14 லட்சம் பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுதா, ஷர்மிளா என இருவர் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில், "இந்த வழக்கில் மனுதாரர்கள் மற்றும் அவருடன் மேலும் ஒருவர் என 3 பேர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 96,50,000 பணத்தை அரசு வேலை வாங்கித் தருவதாக வசூல் செய்து ஏமாற்றி உள்ளனர்", என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கும் காலத்தை கருத்தில் கொண்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் ரூ.3 லட்சம் பணத்தினை கரூர் கிழமை நீதிமன்றத்தில் வைப்பு நிதியாக செலுத்தவும், மறு உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினந்தோறும் காலை கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிக்க   | களவாளடப்பட்ட காவல் தெய்வத்தின் சிலை!