தண்ணீர் கேன் போட சென்ற வீட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது!

புதுச்சேரியில் தண்ணீர் கேன் போட சென்ற வீட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தண்ணீர் கேன் போட சென்ற வீட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது!

காரைக்கால், வள்ளலார் நகரை சேர்ந்த நவாஸ்கான் என்பவர், குடிநீர்  கேன் வினியோகிக்கும் நிறுவனத்தில் டெலிவரி மேனாக  பணிபுரிந்து வருகிறார். இவர் காரைக்கால் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வாட்டர் கேன் டெலிவரி செய்ய சென்றுள்ளார்.

அப்போது அந்த வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமறைவாக இருந்த நவாஸ்கானை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.