2 கிலோ திமிங்கல எச்சத்தை கடத்த முயன்ற 6 பேர் கைது!

2 கிலோ திமிங்கல எச்சத்தை கடத்த முயன்ற 6 பேர் கைது!

நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு 2 கிலோ திமிங்கல எச்சத்தை கடத்த முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில் சோதனை:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து திமிங்கல எச்சத்தை மும்பைக்கு கிடைத்த போவதாக கிடைத்த தகவலை அடுத்து மாவட்ட மாவட்ட உதவி வன பாதுகாவலர் சிவகுமார் தலைமையில் வன அதிகாரிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த ரயிலை சோதனை செய்தனர்.

2 கிலோ திமிங்கில எச்சம் கடத்த முயற்சி:

அப்போது, சந்தேகம் படும்படி நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அழகிய பாண்டிபுரம் பகுதியை சேர்ந்த தினகரன் (36) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் 2 கிலோ திமிங்கில எச்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வனத்துறையினர் அதிரடி விசாரணை:

இது குறித்து வனத்துறையினர் அதிகாரிகள் அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில், பெருவிளையை சேர்ந்த அருள் ,மகேஷ், பாரதிபுரத்தைச் சேர்ந்த திலீப் குமார், ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த சதீஷ், தம்மத்து கோனத்தைச் சேர்ந்த சுபா தங்கராஜ், ஆகியோரை கைது செய்தனர்.

6 பேர் கொண்ட கும்பல்:

மேலும் பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இதன் பின்னணியில் பெரிய கும்பல் ஒன்று இருப்பது தெரியவந்ததை அடுத்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். 6 பேர் கொண்ட கும்பல் திமிங்கலத்தின் எச்சத்தை கடத்திய வழக்கில் கைதாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.