முன்னாள் முதலமைச்சர் கொலை வழக்கு, "மரண தண்டனையை குறைக்க முடியாது" உச்சநீதிமன்றம்...!!

முன்னாள் முதலமைச்சர் கொலை வழக்கு, "மரண தண்டனையை குறைக்க முடியாது" உச்சநீதிமன்றம்...!!

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சா் பியாந்த் சிங் கொலை வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சாப்பில் காலிஸ்தான் தனி நாட்டிற்கான கோரிக்கை எழுந்தது. அப்போது பஞசாப் மாநில அரசுக்கும் காலிஸ்தான் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவியது. இதில் காலிஸ்தான் போராட்டக்காரர்களை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை மேற்கொண்ட அம்மாநில காங்கிரஸ் முதல்வர் பியாந்த்சிங் 31.08.1995 அன்று சண்டிகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்துக்கொண்டு காரில் ஏற முயன்ற போது, பாபர் கல்சா இயக்கத்தைச் சேர்ந்த தில்வார் சிங் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒருவேளை தில்வார் சிங்கின் உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்காமல் போயிருந்தால், இரண்டாவது மனித குண்டாகச் செயல்பட பல்வந்த் சிங் தயாராக இருந்தார். 

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது தம் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதுடன், அதைப் பெருமையாகக் கருதுவதாகவும் தெரிவித்தார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதும் கூட, அதைக் குறைக்க வேண்டும் என்று கருணை மனுவை அப்போது அவர் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் 2012-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் பாதல் கொடுத்த கருணை மனுவின் அடிப்படையில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அவா் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதனை விசாாித்த உச்சநீதிமன்றம் ராஜோனாவின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது என தீர்ப்பு அளித்தது.

இதையும் படிக்க:பிக் பாஸில் அசிம் போலியாக வெற்றி பெற்றதாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்...!!