ரவுடிகள் சுட்டதில் காயமடைந்த போலீசார்; நலம் விசாரித்த டிஜிபி!

ரவுடிகள் சுட்டதில் காயமடைந்த போலீசாரை தமிழக டி.ஜி.பி.சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஸ் ஆகிய இரு ரவுடிகளை பிடிக்க முற்பட்ட போது காவலர்கள் ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி, லிவி பிரபு  மீது ரவுடிகள் அவர்கள் வைத்திருந்த  துப்பாக்கியால்  சுட்டனர். அதில் அந்த மூன்று காவலர்களும் படுகாயமடைந்தனர். 

காயமடைந்த மூன்று காவலர்களும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் நலம் விசாரிக்க டி.ஜி.பி. சங்கர் ஜிவால், ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஆகியோர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆவடி காவல் ஆணையர் சங்கர், கடந்த ஆகஸ்ட் மாதம் செங்குன்றத்தில் நடந்த பார்த்திபன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முத்து சரவணன் மற்றும் சதீஷை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. 

அதிகாலை தகவலின் பேரில் சென்ற போலீசார் மீது அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். எதிர் தாக்குதல் நடத்த காவல் அதிகாரிகள் திருப்பி சுட்டனர். இதில் 2 பேரும் உயிரிழந்தனர். பிரபல ரவுடிகளான இவர்களில் 6 கொலை வழக்குகள் முத்துசரவணன் மீதும், 5 கொலை வழக்குகள் சதீஷ் மீதும் உள்ளது.  கூலிப்படை தலைவனாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது எனக் கூறினனார். மேலும், துப்பாக்கி அவர்களுக்கு எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையர் சங்கர் தெரிவித்தார்.

இதையும் படிக்க:முதலமைச்சர் பற்றி அவதூறு; முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமீன்!