குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொன்ற காதலி...!!

குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொன்ற காதலி...!!

குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலியே காதலனைக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர்  சஞ்சீவ் குமார் (18) இவர் திருப்பூரில் உள்ள டாஸ்மார்க் கடையில் வேலை பார்த்து வருகிறார். தனது பிறந்த நாளை சென்னையில் உள்ள தன்னுடைய காதலியுடன் கொண்டாடுவதற்காக கடந்த  7 ஆம் தேதி திருப்பூரில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்.

சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சுற்றிவிட்டு ஏழாம் தேதி இரவு மீண்டும் திருப்பூர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தபோது அண்ணா நகரை சேர்ந்த தான் காதலித்து வரக்கூடிய 16 வயது சிறுமியை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அழைத்திருக்கிறார் சஞ்சீவ் குமார்.

இரவு 10 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 5வது நடைமேடைக்கு 16 வயது சிறுமி வந்திருக்கிறார். அப்போது சஞ்சீவ் குமாருக்கு தான் வாங்கி வந்த மாசா குளிர்பானத்தை சிறுமி கொடுத்ததாகவும், அதை குடித்த பின்னர் "என்னை மன்னித்துவிடு உன்னை பழி வாங்குவதற்காகவே உன்னை வரவழைத்து குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்தேன் என சிறுமி சஞ்சய் குமாரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சிறுமி இரவு 10 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்திருப்பதை அறிந்த அவரது தாயார் மற்றும் மூத்த சகோதரி இருவரும் நேரடியாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து சஞ்சீவ் குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர் இதில் சஞ்சய் குமார் பயந்துள்ளார். 

பின்னர் இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தங்கி விட்டு மறுநாள் காலையில் ஆவடியில் உள்ள தன்னுடைய மாமா செல்வராஜ் வீட்டிற்கு சென்று, தனக்கு, தான் காதலித்து வரக்கூடிய பெண் விஷம் கொடுத்து விட்டதாக கூறி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோதனை செய்திருக்கிறார்.

அதன் பின்னர் உடல்நிலை மோசம் அடையவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அங்கும் மிகவும் ஆபத்தான கட்டத்திலேயே சஞ்சய் குமார் இருந்துவந்திருக்கிறார். இதனிடையே சிகிச்சையில் இருந்த போது காவல்துறையினரிடம் தன்னுடைய காதலி, தனக்கு மாசா குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து விட்டதாக கூறி மரண வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

இதன் பின்னர் சஞ்சீவ் குமாரை  தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்த்துக் கொள்வதாக கூறி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து, நேற்று அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே உயிர் இழந்து விட்டதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 

இதனைத் தொடர்ந்து உடனடியாக சஞ்சீவ் குமாரின் உடலானது அவருடைய சொந்த ஊரான பரமக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்