இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.. உறவினர்கள் ஆர்ப்பாட்டம் - கணவர் கைது

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே இளம் பெண் தூக்கிட்டு  தற்கொலை செய்த வழக்கில் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இளம் பெண் தூக்கிட்டு  தற்கொலை..  உறவினர்கள் ஆர்ப்பாட்டம் - கணவர் கைது

ஆடுதுறை நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜகுரு - இந்துமதி தம்பதி். இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடங்களாகிறது. இந்நிலையில் கணவர் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்ததால், மனமுடைந்த இந்துமதி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, ராஜகுரு கடந்த 2 நாட்களுக்கு முன்  தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதனிடையே  இந்துமதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்கொலை செய்த பெண்ணின் உறவினர்கள் ராஜகுரு மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தற்கொலைக்கு தூண்டிய கணவர் ராஜகுருவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.