என் தந்தை மீது நடவடிக்கை எடுங்கள்... போலி டாக்டரை போட்டுக் கொடுத்த மகன்... 

மதுரையில் மகனின் பல் மருத்துவப் பதிவெண்ணை கொண்டு மருத்துவம் படிக்காத தந்தை சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார், தனது தந்தை செயற்கை பல் அளவிடும் பணியை மட்டுமே செய்வதாக பல் மருத்துவர் விளக்கம்.

என் தந்தை மீது நடவடிக்கை எடுங்கள்... போலி டாக்டரை போட்டுக் கொடுத்த மகன்... 

மதுரை மேலமாசி வீதியில் 40 ஆண்டுகளாக தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது, இந்த மருத்துவமனையினை பல் மருத்துவர் விஸ்வரூபன் என்பவர் நடத்தி வருகிறார்.

பல் மருத்துவர் விஷ்வரூபன் என்பவரது மருத்துவ பதிவெண்ணை பயன்படுத்தி மருத்துவம் படிக்காமல் அவரது தந்தை பொன்ராஜ் சட்ட விரோதமாக மருத்துவம் பார்த்து வருவதால் இச்செயலில் ஈடுபட்டு வரும் மருத்துவர் மற்றும் அவரது தந்தை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல் மருத்துவ சிகிச்சைக்கு வெங்கடேசன் என்பவர் சில வீடியோ காட்சிகளுடன் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் புகார் மனு அளித்தார்.

இப்புகார் மனுவை மாநகர காவல்துறையினர் விசாரிக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். வெங்கடேசன் புகார் குறித்து பல் மருத்துவர் விஸ்வரூபனிடம் தொலைபேசி வாயிலாக கேட்ட போது "தனது தந்தை பல மருத்துவ சிகிச்சை பார்க்கவில்லை எனவும், செயற்கை பல் அளவீடும் பணி மற்றும் மருத்துவமனை நிர்வாகப் பணியை மட்டுமே மேற்கொண்டு வருகிறார்" என தெரிவித்தார்.