21 வயது கல்லூரி மாணவருடன் கம்பி நீட்டிய 43 வயது பெண்... உறவுகளை இழந்து காப்பகத்தில் தவிக்கும் அவலம்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கல்லூரியில் படிக்கும் மகள் மற்றும் மகனை தவிக்கவிட்டு 21 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்து வெளியூரில் குடும்பம்  நடத்திய 43 வயது பெண்ணையும் மாணவனையும் ஆறு மாதங்களுக்கு பின்னர் போலீஸார் மீட்டுள்ளனர்.

21 வயது கல்லூரி மாணவருடன் கம்பி நீட்டிய 43 வயது பெண்... உறவுகளை இழந்து காப்பகத்தில் தவிக்கும் அவலம்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிபள்ளத்தில் சேர்ந்தவர் பிரின்ஸ் (21). கல்லூரி மாணவரான இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பூரணி என்ற 43 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

பூரணிக்கு ஏற்கனவே திருமணமாகி கல்லூரியில் படிக்கும் மகள் மற்றும் பத்தாவது வகுப்பு படிக்கும் மகன் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் இவர்களது கள்ள தொடர்பு குடும்பத்தாருக்கு தெரிய வரவே இவர்களை குடும்பத்தார் கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கல்லூரி மாணவனான பிரின்சும், பூரணியும் தங்கள் கள்ளக் காதலை கைவிட முடியாமல் தவித்தனர். இதனால் வேறு வழியின்றி இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து பிரின்சின் பெற்றோரும், பூரணியின் குடும்பத்தாரும் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதை தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வந்தனர் இதனிடையே பிரின்ஸ் சும் பூரணியும் திருச்சியில் வீடு எடுத்து தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

காலம் கடந்ததால் பூரணியின் உறவு புளித்துப் போனதால் பிரின்ஸ் தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்து தான் திருச்சியில் இருப்பதாகவும் தன்னை மீட்டுச் செல்லும் படியும் கூறியுள்ளார். இதனையடுத்து பெற்றோர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் திருச்சி சென்று இருவரையும் அழைத்து வந்தனர். 

பூரணியை அவரது குடும்பத்தார் ஏற்க மறுத்ததால் அவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.  பின்னர் பிரின்சை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். திருமண வயதில் மகள் இருக்கும்போது தகாத உறவு காரணமாக தவறான பாதையில் சென்ற பூரணியை அவரது உறவினர்கள் கைவிட்ட நிலையில் தற்போது காப்பகத்தில் இருந்து வேதனையில் சிக்கித் தவித்து வருகிறார்.