கர்நாடக தேர்தல் களத்தில் மீண்டும் பரபரப்பு...! பாஜக இளைஞரணி நிர்வாகி கொலை....!

கர்நாடக தேர்தல் களத்தில் மீண்டும் பரபரப்பு...!  பாஜக இளைஞரணி நிர்வாகி கொலை....!

கர்நாடகாவில் தேர்தல் நெருங்கியுள்ள சமயத்தில் தார்வாட் மாவட்டத்தில் பாஜக இளைஞரணி நிர்வாகி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பாஜகவில் இருந்து காங்கிரஸ் இணைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் போட்டியிடும் தொகுதியை உள்ளடக்கிய மாவட்டமான ஹூப்ளி தார்வாட் மாவட்டத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

 தார்வாத் தாலுகாவில் உள்ள கோட்டூர் கிராமத்தில் பாஜக தார்வாட் மாவட்ட யுவ மோர்ச்சாவின் துணைத் தலைவர் பிரவீன் கமர் நேற்று இரவு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது  மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முதற்கட்ட விசாரணையில் தனிப்பட்ட காரணங்களுக்காக இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறுதான் இந்தக் கொலைக்கு காரணம் என்று  தெரியவந்துள்ளது. 

நேற்று கோட்டூர் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் இதே கிராமத்தை சேர்ந்த இருவர் குடித்துவிட்டு தகராறு செய்த நிலையில் அவர்களை பிரவீன் கமர் வழிமறித்து அங்கிருந்து அகற்றியுள்ளார். இதனால் தகராறில் ஈடுபட்ட நபர்கள் கோபமடைந்து பிரவீன் கமர் வீட்டிற்கு செல்லும் போது சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். 

இதனையடுத்து, படுகாயம் அடைந்த பிரவீனை வீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த போது அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொலை செய்த மூவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜேஸ்வி சூர்யா இது அரசியல் கொலை என குற்றம் சாட்டி இருப்பது தேர்தல் நேரம் என்பதால் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க }சட்டசபை தேர்தலுக்கு பின், தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் தனிப்பட்ட விரோதத்திற்காக நடக்கும் கொலைகளை கூட பாஜக அரசியல் கொலைகளாக மாற்றி ஆதாயம் தேடுவதாகத் தெரிகிறது, என  காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதையும் படிக்க }வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு...! உதவி ஆணையருக்கு ஒரு வருடம் சிறை ...!