பப்ஜி மதன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்: போலீசார் அதிரடி!

பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் மதன், ஆபசமாக பேசியும், பெண்களை தரக்குறைவாக விமர்சித்தும் வீடியோ வெளியிட்ட வண்ணம் இருந்தார். குறிப்பாக தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மூலம்  சிறுவர், சிறுமியர்களிடம் அவதூறாக பேசும் வகையில் வீடியோ பதிவிட்ட காரணத்தினால் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் மீது நூற்றுக்கணக்கான புகார்கள் வந்த நிலையில், நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அவரது சொத்துக்கள் அனைத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் முடக்கப்பட்டன. மேலும் பணமோசடி செய்ததாகவும், பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. 

இந்நிலையில் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்ற தன்மையை பொறுத்து பப்ஜி மதன் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் அவர் ஓராண்டுக்கு பிணையில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.