சுங்கச்சாவடி ஊழியர்களின் அராஜகங்கள்...லாரி ஓட்டுனரை வெறிகொண்டு தாக்கிய ஊழியர்!!

சுங்கச்சாவடி ஊழியர்களின் அராஜகங்கள்...லாரி ஓட்டுனரை வெறிகொண்டு தாக்கிய ஊழியர்!!

செங்கல்பட்டு மாவட்டம் வரதராஜபுரம் சுங்கச்சாவடியில் லாரி ஓட்டுநரை சுங்கச்சாவடி ஊழியர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே வரதராஜபுரம் உள்ள சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒருமையில் பேசுவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள், தங்களின் அதிருப்திகளை வெளிப்படுத்தியவண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், இதையெல்லாம் மிஞ்சும் வகையில், சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர், லாரி ஓட்டுனரை வெறிகொண்டு தாக்கியம் சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியளித்துள்ளது. வந்த நிலையில் தற்போது லாரி ஓட்டுநரை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை வண்டலூர்-மீஞ்சூர் வெளி வட்டச் சாலை வழியாக ரமேஷ் (48) என்பவர் லாரியை மீஞ்சூரில் இருந்து வண்டலூர் நோக்கி ஒட்டி வந்துள்ளார். அப்பொழுது வரதராஜபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருந்த பேருந்தின் பின் காத்திருந்துள்ளார். ஏற்கனவே சுங்க கட்டணம் செலுத்துவதற்காக தனியார் பேருந்து 10 நிமிடத்திற்க்கு மேலாக நின்று கொண்டு இருந்ததால், பேருந்து பின்னால் நின்று கொண்டு இருந்த ரமேஷ் ஒலி எழுப்பியுள்ளார்.

ஆரன் சத்தத்தைக் கேட்டு ஆத்திரம் அடைந்த சுங்கச் சாவடி ஊழியரான கோகுல் (25), லாரி ஓட்டுநரை நெருங்கி வந்து, தாகத்தை வார்த்தைகளால் பேசி, பின்னர் கீழே இறங்கும்படி கத்தியுள்ளார். தொடர்ந்து கெட்ட வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்த கோகுல், எகிறி குதித்து காலால் மிதித்துள்ளார். இதனிடையே, பிழைக்க வந்த உனக்கு இவ்ளோ திமிரா? என ஒருமையில் பேசியுள்ளார். இவை அனைத்தையும், அருகில் மற்றொரு பிரிவில், இருந்த கார் ஓட்டுநர் படம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தால் மனமுடைந்த லாரி ஓட்டுநர், தனது அதிருப்தியை ஒரு வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் கோகுலை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலுவதால் போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இதையும் படிக்க || "மன உளைச்சல் ஏற்படுத்துகிறார்கள்"... காவல் ஆய்வாளர் வீடியோ வைரல்!!