ரெட்டியார்பட்டியில் திருநங்கை கொலை - டிரைவர் வாக்குமூலம்...

ரெட்டியார்பட்டியில் திருநங்கை கொலை - டிரைவர் வாக்குமூலம்...

நெல்லை | சுத்தமல்லியை சேர்ந்தவர் பிரபு ( வயது 35). திருநங்கையான இவர் நேற்று ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். கொலை அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த கொலை குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்கு ளத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ்குமார் என்பவரை பிரபுவை கொலை செய்தது தெரியவந்தது. டிரைவர் கைது இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசர் அவரிடம் விசா ரணை நடத்தினர்.

மேலும் படிக்க | சட்டம் படித்த முதல் திருநங்கை...! வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழை வழங்கிய பார் கவுன்சில் தலைவர்..!

அப்போது அவர் கூறியதாவது : 

ரெட்டியார்பட்டி நான்கு வழிப்பாதையில் எனது லாரியை நிறுத்தி விட்டு நானும், லாரி கிளீனரும் டீ குடிக்க சென்றோம். அப்போது அங்கு பிரபு மற்றும் அவருடன் வந்தவர்கள் லாரியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்தனர். இதைப்பார்த்த நான் அவர்களை கண்டித்தேன். அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள் பணத்தை திரும்பி தர மறுத்ததுடன் என்னை ஆபாசமாக திட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த நான் சுத்தியலால் பிரபுவை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன். இதில் அவர் இறந்து விட்டார்.

என்று கூறினார். அவர் கூறிய தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கையின் கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே சடலமாக மூவர் மீட்பு!