திருப்பூர் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது!

திருப்பூர் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட வெங்கடேசனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் கள்ளக்கிணறு பகுதியை சோ்ந்த செந்தில்குமார் என்பவரின் வீட்டின் அருகே மா்ம நபா்கள் சிலா் மது அருந்திக்கொண்டிருந்த நிலையில், அதனை தட்டிக்கேட்ட செந்தில்குமாரையும், அவரது உறவினர்கள் 3 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் செந்தில் குமாரை தவிர இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேசமயம் போதை ஆசாமிகள் தாக்கியதில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செந்தில் குமாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிக்க : அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் கட்சி பொறுப்புகள் பறிப்பு... காரணம் என்ன?

இச்சம்பவம் தொடர்பாக  போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நெல்லையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் செந்தில் குமாரிடம் பணிபுரிந்து வந்ததும், அவரின் நடவடிக்கை பிடிக்காததால் பணியிலிருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரது வீட்டருகே மது அருந்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டிக் கேட்ட செந்தில்குமார் அவரது தம்பி, தாய், சித்தி ஆகியோரை வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. 

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட செல்லமுத்து போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற போது, தவறி விழுந்ததில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.