கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை... லாரி மற்றும் பொக்லைன்களை சிறைபிடித்த கிராம மக்கள்...

திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ள வந்த பொக்லைன் எந்திரங்கள் மற்றும் லாரிகளை மக்கள் சிறைபிடித்தனர்.

கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை... லாரி மற்றும் பொக்லைன்களை சிறைபிடித்த கிராம மக்கள்...

திருத்தணி அருகில் இலுப்புர் கிராமத்து பகுதியில் செல்லும் கொசத்தலை ஆற்று படுகையில் இருந்து மணல் எடுத்து வந்த 2 லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை கிராம மக்கள் இரவு சிறைபிடித்து போராட்டம் செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் இது குறித்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை செய்தனர் இந்த சம்பவம் குறித்து  கிராம மக்கள் கூறியதாவது,

திருவாலங்காடு பொதுப்பணித்துறை அதிகாரி வழங்கிய கடிதம் என்று ஒன்று வைத்துக் கொண்டு திருவள்ளூர் பகுதிக்கு பருவமழை வெள்ளத் தடுப்பு பணிக்கு என்று மணல் மூட்டை  சேகரிப்பு செய்வதற்காக மணல் எடுத்து செல்வதற்கு என்று ஒரு கடிதத்தை வைத்துள்ளனர்.  எங்கள் பகுதியில் இருந்து திருவள்ளூர் பகுதிக்கு 30 கிலோமீட்டர் இந்தப் பகுதிக்கு அருகில் எங்கும் மணல் இல்லையா? பல இடங்களில் இருந்தும் எங்கள் பகுதிக்கு மணல் எடுக்க ஏன்? வரவேண்டும், அதிகாரிகள் மணல் எடுக்க அந்த கடிதத்தில் மணல் எடுக்க வந்த லாரிகள் அந்த லாரிகளில் பெயர், உரிமையாளர் பெயர், அந்த லாரிகளின் பதிவு எண், ஏன் குறிப்பிடவில்லை,

இதுபோல் மணல் எடுக்கும் பணி என்றால் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் எடுக்கவேண்டும் அவர்கள் யாரும் இங்கு வரவில்லை. இவை எவையும் குறிப்பிடாமல் தன்னிச்சையாக இரண்டு நாட்களாக 50 லோடு மணல் வரை இந்தப் பகுதியில் இருந்து சென்றுள்ளது.

இவை அனைத்தும் அரசியல் கட்சியை சார்ந்த நபர்களின் வாகனங்கள் ஆகையால் முறையாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் டெண்டர் வைத்து மணல் எடுத்து செல்ல அனுமதியும் வழங்கவில்லை. இப்படி சந்தேகத்தின் பேரில் பல சந்தேகங்கள் இருந்ததால் எங்கள் பகுதி ஆற்றுப்பகுதியில் காப்பாற்ற நாங்கள் இந்த வாகனங்களை சிறைப் பிடித்தோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

மேலும் தொடர்ந்து அதிகாரிகளுடன்   4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு அதிகாரிகள் கூறிய வார்த்தையை அடுத்து இன்றுடன் இந்த லாரிகள் மணல் எடுக்க வராது என்று கூறினார்கள். இதனை ஏற்று அந்த பகுதியில் சிறைப்பிடிக்கப்பட்ட இரண்டு லாரிகள் ஒரு பொக்லைன் எந்திரம்  அந்த பகுதியில் இருந்து சென்றது அதிகாரிகளின் அலட்சியமே மணல் எடுக்க வந்த லாரிகள் சிறைபிடிப்பு அரசு வேலைக்கு மணல் எடுக்க வந்தாலும் தெளிவான முறையில் அரசு கடிதம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்துள்ளனர். கடைசி வரை அதிக மணல் எடுத்து சென்றதற்கு அதிகாரிகள் எந்த அபராதமும் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை சம்பந்தப்பட்ட லாரிகள் மீது என்று இந்த பகுதி மக்கள் அதிருப்தி மற்றும் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.