கொடநாடு எஸ்டேட்டின் கணினி ஆபரேட்டர் தினேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?

கொடநாடு எஸ்டேட் கணினி ஆபரேட்டர் தற்கொலை தொடர்பாக தனிப்படை போலீசாரின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. தமது மகனுக்கு கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் எந்த மன அழுத்தமும் தரவில்லை என்று தந்தை வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை முடிந்து ஏறக்குறைய தீர்ப்பு வழங்கும் கட்டத்தை எட்டிய நிலையில், தற்போது காவல்துறையினர் மறுவிசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் காவல்துறையினர் சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வந்த தினேஷின் தற்கொலை வழக்கை, மறு விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி கோத்தகிரி வட்டாட்சியரிடம் விசாரணை அதிகாரிகள் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து தினேஷ்குமாரின் தந்தை போஜனிடம், கோத்தகிரி கெங்கரை கிராமத்தில் தனிப்படை போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

தற்கொலைக்கான காரணம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், கொடநாடு நிர்வாகம் எந்த மன அழுத்தத்தையும் தனது மகனுக்கு  கொடுக்கவில்லை எனவும் விசாரணையில் தினேஷ்குமாரின் தந்தை  கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து தினேஷ் குமாரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.