தீபாவளி முன்னிட்டு ‘பிக்’ பாக்கெட்டில் ஆயிரக்கணக்கில் கலெக்‌ஷன் செய்த பெண் கைது...

தீபாவளி பண்டிகையைக் குறிவைத்து தியாகராய நகரில் பிக்-பாக்கெட் அடித்த பெண் திருடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தீபாவளி முன்னிட்டு ‘பிக்’ பாக்கெட்டில் ஆயிரக்கணக்கில் கலெக்‌ஷன் செய்த பெண் கைது...

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில், தியாகராய நகரில் துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி பிக்-பாக்கெட் அடிக்கும் பெண் திருடிகள் கும்பலும் மக்களோடு மக்களாக நடமாடி வருகின்றனர்.

இந்நிலையில் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல துணிக்கடையில் ஆவடியைச் சேர்ந்த பரந்தாமன் என்பவர் தனது குடும்பத்துடன் வந்து பெண்கள் பிரிவில் சேலைகள் எடுத்துள்ளார்.

மேலும் படிக்க | சிரமத்திற்கு உள்ளாகும் மக்கள்.. போர்க்கால அடிப்படையில் பணிகள் - சென்னை காவல்துறை அறிவிப்பு

பின்னர் சேலைக்கான பணத்தை கொடுப்பதற்காக பில் கவுண்டரில் வைத்து பர்ஸை தேடியபோது, அவரது பர்ஸ் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சடைந்தவர், மாம்பலம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் துணிக்கடையில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவர் நடமாடுவது தெரியவந்தது.

மேலும் படிக்க | டெல்லி: பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது.. கைவிரித்த நீதிமன்றம்.. கவலையில் மக்கள்..!

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அப்பெண் குன்றத்துரைச் சேர்ந்த சாந்தி (எ) தில் சாந்தி என்பதும், தீபாவளி பண்டிகையை குறிவைத்து தி.நகர் பகுதியில் பிக்-பாக்கெட் அடித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், பரந்தாமன் என்பவரின் பர்ஸை திருடியது மட்டுமல்லாமல் அதே நாளில், இரண்டு நபர்களின் செல்போன்களையும் சாந்தி திருடியதையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.

மேலும் படிக்க |நெருங்கும் தீபாவளி...பட்டாசுக் கடைகளில் ஆய்வு!

பின்னர் தில் சாந்தியை கைது செய்த மாம்பலம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சாந்தியிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம், இரு செல்போன்கள் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. தில் சாந்தி மீது குரோம்பேட்டை, பல்லாவரம், மாம்பலம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பட்டாசு வெடிக்கும் நேரம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!