வேறொரு பெண்ணுடன் ரீல்ஸ் செய்த கணவர்... ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு!!

வேறொரு பெண்ணுடன் ரீல்ஸ் செய்த கணவர்... ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு!!

கணவன் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பியதால், விரக்கிதியில் இருந்த மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் இருணாபட்டு கொல்ல கொட்டாய் பகுதியைச் சேர்ந்த தணேந்திரன் உஷா தம்பதியரின் மகள் ஷாலினி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு டேம் பகுதியைச் சேர்ந்த சங்கீத். இவர்கள் இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. தற்போது 3 மாத கைக்குழந்தையுடன் இருக்கும் ஷாலினி குழந்தையை பார்த்துகொள்ள ஆள் இல்லாததால், தாய் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.

தான் நேசிக்கும் மனைவி தாய் வீட்டிற்கு செல்வதை பொருத்துகொள்ள முடியாத கணவ்ன் வீட்டில் இருக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அதில் இருந்து எப்படியோ காப்பாற்றிய சங்கீத்தின் குடும்பத்தார், அவரை  சமாதானப்படுத்தி ஷாலினியின் தாய் வீட்டிற்கு செல்ல அனுமதிவாங்கியுள்ளனர். 

மனைவி பிரிந்த சோகத்தில் இருந்த கணவன், ஷாலியின் வாட்ஸ அப் எண்ணிற்கு வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை போலவும், அவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று கூறியதோடு  அவருடன் துணி கடைக்கு சென்று துணி வாங்குவது போன்ற புகைபடங்களை அனுப்பியுள்ளார். மேலும் காதல் பாடல்களை வைத்து ரீல்ஸ் வீடியோக்களையும் எடுத்து மனைவிக்கு அனுப்பியுள்ளார். இதை பார்த்து அதிர்ந்துபோன ஷாலினி ஒரு நாள் முழுவதும் தூங்காமல் வேதனையுடன் இருந்துள்ளார். 

ஒரு கட்டட்தில் வாழ்க்கையை முடித்துகொள்ளலாம் என முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதில் மயங்கிய ஷாலினியை குடும்பத்தார் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சங்கீத்தை பிடித்து விசாரணை செய்ததில் தன் மனைவி பிரிந்து சென்றதால், ஆத்திரத்தில் விளையாட்டாக குடும்ப நண்பரின் மகளுடன் செல்பி எடுத்து அனுப்பியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.   

தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாலினியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ள நிலையில். விளையாட்டு வினையாதை நினைத்து, தான் வருந்துவதாக சங்கீத்தும் காவல்நிலையத்தில் போலிசாரிடம் தெரிவித்துள்ளார். விளையாட்டு வினையாகும் என்பதை மனதில் வைத்து இதுபோன்ற காரியங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதையும் படிக்க ||