நெல்லை; திமுக எம்.பி. மீது வழக்கு! 

நெல்லை; திமுக எம்.பி. மீது வழக்கு! 

நெல்லை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் உட்பட 10 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் சிஎஸ்ஐ விவகாரத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் தலையிடுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்று சிஎஸ்ஐ மதபோதகர் கார்ப்பிரே நோபில்  என்பவர் தாக்கப்பட்டார். இது தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. 
இதனையொட்டி சிஎஸ்ஐ மதபோதகர் கார்ப்பிரே சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இது குறித்து விளக்கம் கேட்டு நாடாளுனமன்ற உறுப்பினர் ஞான திரவியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், “நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஞானத்திரவியம் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார் குறித்த விளக்கத்தினை 7 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

மதபோதகர் கார்ப்பிரே கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்றே நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்தின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இன்று திமுக தலைமையில் இருந்து அறிக்கை வெளியான பிறகே வழக்குபதிவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வழக்கில் பாதிரியார் கார்ப்பரே நோபல் தாக்கப்பட்ட புகாரில் திருநெல்வேலி எம்பி ஞான திரவியம், திருமண்டல செயலாளர் ஜெய் சிங், பொருளாளர் மனோகர் உட்பட 10 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிக்க:சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதிய மேம்பாலம்; நிதி ஒதுக்கீடு!