நெல்லை மதபோதகர் தாக்கப்பட்ட வழக்கு: திமுக எம்பி  முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!

நெல்லை மதபோதகர் தாக்கப்பட்ட வழக்கு: திமுக எம்பி  முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!

நெல்லையில், மதபோதகர் தாக்கப்பட்டது தொடர்பாக நெல்லை  திமுக எம்பி  ஞானதிரவியம்   உட்பட 10 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சிஎஸ்ஐ விவகாரத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் தலையிடுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்று சிஎஸ்ஐ மதபோதகர் கார்ப்பிரே நோபில்  என்பவர் தாக்கப்பட்டார். இது தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. 
இதனையொட்டி சிஎஸ்ஐ மதபோதகர் கார்ப்பிரே சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இது குறித்து விளக்கம் கேட்டு நாடாளுனமன்ற உறுப்பினர் ஞான திரவியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், “நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஞானத்திரவியம் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன.

இதையும் படிக்க: "செந்தில் பாலாஜி நலமுடன் மீண்டு வந்து, திமுகவை மாட்டிவிட வேண்டும்": முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!

இந்தப் புகார் குறித்த விளக்கத்தினை 7 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

மதபோதகர் கார்ப்பிரே கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்றே நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்தின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இன்று திமுக தலைமையில் இருந்து அறிக்கை வெளியான பிறகே வழக்குபதிவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வழக்கில் பாதிரியார் கார்ப்பரே நோபல் தாக்கப்பட்ட புகாரில் திருநெல்வேலி எம்பி ஞான திரவியம், திருமண்டல செயலாளர் ஜெய் சிங், பொருளாளர் மனோகர் உட்பட 10 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்நிலையில், தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க எம் பி ஞான திரவியம் முன் ஜாமின் கோரி தற்போது மனு தாக்கல் செய்துள்ளார்.

நெல்லை எம்பி ஞான திரவியத்தின் முன் ஜாமீன்  மனு மீது வரும் 30ம் தேதி விசாரணை நடைபெறும் என்று மாவட்ட நீதிபதி சீனிவாசன் முன்னிலையில் விசாரணைக்கு வருவதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிக்க: அப்டேட் அப்டேட்... இசை வெளியீட்டு விழாவிற்கு தயாரான ஜெயிலர் படக்குழு!