புழல் சிறையில்  2 செல்போன்கள் பறிமுதல்...!!

புழல் சிறையில்  2 செல்போன்கள் பறிமுதல்...!!

புழல்  சிறையில்  கைதிகள் மறைத்து வைத்திருந்த இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை புழல் மத்திய சிறையில் மகளிர்களுக்கு தனிசிறை  உள்ளது. இந்த சிறையில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கைதிகள் மறைவிடத்தில் செல்போன் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனே அங்கு சென்ற சிறை பெண் காவலர்களை கண்டதும் போதை பொருள் வழக்கில் கைதான உகான்டாவை சேர்ந்த சாண்ட்ரா நான்டேசா, மாலத்தீவை சேர்ந்த சம்சியா ஆகிய இருவரும் காவலர்களை  தள்ளிவிட்டு அவர்களை  தாக்க பாய்ந்து  வந்ததால் அவர்கள் உடனே மேலதிகாரிகளிடம்  இது பற்றி கூறினர். அதன்பின் அவர்களிடம் இருந்த ஒரு செல்போனையும் சார்ஜரையும் சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல ஆண்கள் தண்டனை சிறை பிரிவில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கோட்டி என்ற கோடீஸ்வரன் என்பவர் ஆர். கே.நகர் போலீசாரால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது ஆடையில்  மறைத்து வைத்திருந்த செல்போனையும் சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் இந்த செல்போன்கள் யாருடையது இதிலிருந்து யார் யாருக்கெல்லாம் பேசி வந்தனர் என்பது பற்றி விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்