அரசு பேருந்தில் பெண் பயணியை காலணியால்  அடிக்க முயன்ற ஓட்டுநர்: வைரலாகும் வீடியோ!

தென்காசி அருகே அரசு பேருந்தில் பெண் பயணியை காலணியால்  அடிக்க முயன்றதோடு, ஆபாச வார்த்தைகளில் ஓட்டுனர் ஒருவர் பேசும் காட்சி வைராகி வருகிறது.

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ஆலங்குளம் வரை 17 நம்பர் அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தின் ஓட்டுநர் முப்பிடாதி முத்துவுக்கும், பெண் பயணி ஒருவருக்கு இடையே சுதந்திர தினத்தன்று  வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஓட்டுநர் கையை முறுக்கி  அந்த பெண்ணை அடிக்க முற்பட்டதோடு, காலணியால் தாக்கவும் முயன்றார்.

மேலும் அந்த பெண்ணை ஓட்டுநர் தாகத வார்தைகளில் சாடினார். இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்தவர்கள் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நிலையில் தற்போது இது வைரலாக பரவி வருகிறது.