முன்னாள் டிஜிபி பெயரில் போலி முகநூல் கணக்கு!

முன்னாள் டிஜிபி பெயரில் போலி முகநூல் கணக்கு!

முன்னாள் டிஜிபி மற்றும் தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவியின் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. 

தமிழக முன்னாள் டிஜிபியும் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் முதல் காவல் ஆணையருமான ரவி சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர். யூடியூப் சேனல்களுக்கு இவர் வழங்கும் பேட்டிகள் பலருக்கும் காவல்துறையை பற்றிய அறிய தகவல்களை வழங்கி வருகின்றன.

மேலும், உடற்பயிற்சி தொடர்பாகவும் இளைஞர்களை உத்வேகபடுத்தும் நல்ல பதிவுகளை பதிவிட்டு வருபவர் ஏராளமான இளைஞர்கள் மற்றும் அதிகாரிகள் இவரை பேஸ்புக்கில் பின் தொடர்ந்து வருகின்றனர்


இந்த நிலையில் ரவியின் புகைப்படத்தை வைத்து அவரது பெயரிலே போலியான பேஸ்புக் அக்கவுண்டை சைபர் கிரைம் மோசடி கும்பல் தொடங்கி உள்ளது. மேலும் அந்த அக்கவுண்டில் இருந்து அவருக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் இருந்து தான் புதியதாக பர்னிச்சர் பொருட்களை வாங்கி உள்ளதாகவும், அதனை வாங்குமாறு பரிந்துரை செய்தும் மெசேஜ் அனுப்பி உள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முன்னாள் டிஜிபி ரவி உடனடியாக இது குறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க:பொறியியல் கலந்தாய்விற்கான அட்டவணை இன்று வெளியீடு!