அரசு மருத்துவரை செருப்பால் அடிக்க முயன்ற வாலிபர் கைது..!

அரசு மருத்துவரை செருப்பால் அடிக்க முயன்ற வாலிபர் கைது..!

அரியலூர் மாவட்டத்தில் பணியில் இருந்த அரசு மருத்துவரை செருப்பால் அடிக்க முயன்ற வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குமிழியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரியலூரைச் சேர்ந்த பெண் மருத்துவர் சத்யா பணியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணியில் இருந்த போது தனது கணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. குமிழியம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது அக்கா மகனை சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர் ஆர்வம் காட்டாமல் தன் கணவருடன் மருத்துவர் சத்யா பேசி இருந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் மருத்துவர் சத்யாவின் கணவரை நோக்கி யாரென கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு மருத்துவரின் கணவர் அதைகேட்க நீ யார் என சுரேஷை நோக்கி கேள்வி எழுப்பியதாக தெரிகிறது, இந்நிலையில் வாக்குவாதம் முற்றவே சுரேஷ் மருத்துவரின் கணவரை தகாத வார்த்தைகளால் திட்டி மருத்துவர் சத்யா மற்றும் கணவர் சிலம்பரசனை செருப்பால் அடிக்க முயன்றதாக தெரிகிறது.

இந்நிலையில் இது குறித்து மருத்துவர் சத்யா இரும்புலிகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் பேரில் போலீசார் சுரேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அப்போது அப்பகுதி கிராம மக்கள் சுரேஷுக்கு ஆதரவாக ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் அங்கு வந்த காவல்துறையினரிடம் மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை எனவும் வந்தாலும் முறையாக பணியாற்றுவதில்லை என்றும் மக்கள் முறையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க:"ஜாதியை தூக்கிப்பிடிப்பவர்களுக்கு வரலாற்றில் இடமில்லை" அமைச்சர் மெய்யநாதன்.