திருடர்கள் ஜாக்கிரதை என மூதாட்டிக்கு பாடமெடுத்த திருடன்!

திருடர்கள் ஜாக்கிரதை என மூதாட்டிக்கு பாடமெடுத்த திருடன்!

மதுரை அருகே, சாலையில் நடந்து வந்துகொண்டிருந்த மூதாட்டியிடம், திருடன் ஒருவன் தனது தந்திரத்தால், மூதாட்டியின் நகையை திருடியுள்ளார்.

மதுரை, பசுமலை பகுதியில் உள்ள விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி. இந்த மூதாட்டிக்கு 70 வயதாகிறது. இந்த மூதாட்டி, கடந்த 1-ம் தேதியன்று, திருப்பரங்குன்றத்தில் உள்ள மாயாண்டி கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு சாமி கும்பிட்டுவிட்டு, வீடு திரும்பணியுள்ளார்.

அப்பொழுது,  அந்த வழியாக வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார். அவர் பத்மாவதியிடம், வயதான காலத்தில் ஏன் நகையை போட்டுகொண்டு இந்த பக்கம்  வந்தீர்கள், இந்த பக்கம் திருடர்கள் அதிகமாக உலவுவதாகவும் கூறி, எச்சரித்துள்ளார்.

இதைக்கேட்டு பதறிப்போன பத்மாவதி, அந்த ஆசாமியிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அந்த ஆசாமி, பத்மாவதியின் 6 சவரன் தங்க நகையை கழற்றி காகிதத்தில் சுருட்டி வைத்து விட்டு, சிறிது தூரம் துணைக்கு வந்துவிட்டு, காகித பொட்டலத்தை கொடுத்துவிட்டு, சென்றுவிட்டார்.

பின்னர், மூதாட்டியும் அந்த நபரிடம் இருந்து வாங்கிய, காகித பொட்டலத்தை பிரித்துப் பார்த்த பின்னர், தான் ஏமாந்துவிட்டதை உணர்ந்துள்ளார். ஏனென்றால், காகிதத்தில் இருந்தது நகை அல்ல, கற்கள் தன இருந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், திருப்பரங்குன்றம் காவல்நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். விசாரணையில் இறங்கிய போலீசார், மர்ம ஆசாமியின் அடையாளம் குறித்து கேட்டறிந்து, சி.சி.டி.வி. காட்சிகளையும் பார்த்து, குற்றவாளியை கொத்தாக தூக்கினர். 

பத்மாவதியிடம் வெற்றுக் காகிதத்தைக் கொடுத்து 6 சவரன் நகையை அடித்தது, கோபாலிபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பது தெரியவந்தது. 

பத்மாவதியிடம் இருந்து திருடிய நகையை அடகு கடையில் வைத்த மாரிமுத்து, 1 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை வாங்கியது, விசாரணையில் கண்டறியப்பட்டது. பின்னர் மாரிமுத்துவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிக்க || "தகுதித் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.