100 நாள் வேலையில் முறைகேடு; மக்கள் சாலை மறியல்!

100 நாள் வேலையில் முறைகேடு; மக்கள் சாலை மறியல்!

அரகண்டநல்லூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு முன்பாக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து  வந்துள்ளனர். 

ஆனால், இதுவரைக்கும் பொதுமக்களுக்கு முறையாக பணம் வரவில்லை. இதனால், 11 நாள் வேலைத்திட்டத்தில், முறை கேடு நடக்கின்றது என மக்கள் சந்தேகித்துள்ளனர்.

இதனால், 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கண்டித்து கண்டாச்சிபுரம்- திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் சித்ரா மற்றும் போலீசார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

உங்களுடைய பிரச்சினை கண்டிப்பாக தீர்த்துவைக்கப்படும், உங்கள் அனைவருக்கும் பணம் வந்துவிடும், இது போல் தவறு இனிமேல் நடக்காது என அதிகாரிகள் உறுதியளித்த பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.

 இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது

இதையும் படிக்க: இந்தியன் 2 படப்பிடிப்பை நிறுத்திய காவல்துறையினர்!