கடும் பாதுகாப்பை மீறி கலைவாணர் அரங்கத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!

கடுமையான பாதுகாப்பை மீறி கலைவாணர் அரங்கத்தில் தஞ்சாவூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடும் பாதுகாப்பை மீறி கலைவாணர் அரங்கத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!

கடுமையான பாதுகாப்பை மீறி கலைவாணர் அரங்கத்தில் தஞ்சாவூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பெட்ரோல்ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் கலைவாணர் அரங்கத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி இருக்கும் சாலையின் வழியாக கலைவாணர் அரங்க நுழைவாயில் இருக்கிறது இங்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் இன்று மதியம் 12. 45 மணி அளவில் திடீரென வாலிபர் ஒருவர் கையில் பெட்ரோல் கேனுடன் வந்து உடல் முழுதும் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் மேற்கொண்டு அவரிடம் விசாரணை செய்ததில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பதும் தெரியவந்துள்ளது மேற்கொண்டு ஆறுமுகம் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஆறுமுகத்தை கலைவாணர் அரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். போலி பத்திரிக்கையாளர் அடையாள அட்டையுடன் உள்ளே வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.