சாத்தான்குளம் விவகாரம்: 3 மாதங்களில் முடிக்க உத்தரவு!

சாத்தான்குளம் விவகாரம்: 3 மாதங்களில் முடிக்க உத்தரவு!

சாத்தன் குளம் தந்தை மகன் கொலை வழக்கை நீதிபதி நியமிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம்  போலீசார்   விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கப்பட்டதில், இறந்தனர். இதன் எதிரொலியாக, சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,  உள்ளிட்ட 9 காவலர்கள்  கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது சி.பி.ஐ, வழக்குப் பதிந்தது. 9 பேர் மீது குற்றப்பத்திரிகையை கடந்த  2020 செப்.,ல் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. இந்த கொலை  வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையி ல், கடந்த ஆண்டு, ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் . 

அதில் , வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ள போலீசார் செல்வாக்கு மிக்கவர்கள். சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது. எனவே மதுரை  கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 2 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் , மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு  விசாரணைக்கு, மேலும்  5 மாத கால , கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக்கோரி மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்  தரப்பில்  மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயர்நீ தி மன்றம் மதுரை கிளை நீதிபதி முரளிசங்கர் முன்  விசாரணைக்கு வந்தது
அப்போது சிபுஐ தரப்பில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் நீதிபதி பணியிடம் காலியாக இருந்த நிலையில் தாமதமாகியது.

சிபிஐ  தரப்பில் தற்போது வரை 8. முக்கிய சாட்சிகள் விசாரிக்க வேண்டியதுள்ளது. 2 மருத்துவர்கள், ஒரு நீதித்துறை நடுவர், இந்த வழக்கை  விசாரித்த சிபிசிஐடி  அதிகாரி ஒருவர்,   இந்த வழக்கின் சிபிஐ.  விசாரணை அதிகாரி  மற்றும் 3 தனி நபர்கள், என மொத்தம் 8 சாட்சிகள் மட்டுமே விசாரிக்க பட வேண்டும் எனவும் 2 முதல் 3 மாதங்கள் கால அவகாசம் தேவை படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சாத்தன் குளம் தந்தை மகன் கொலை வழக்கை விசாரிக்கும், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களில் வழக்கு விசாரணை யை முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: அலட்சியமாக உறங்கிய செவிலியர்கள்...மருத்துவ உதவி கிட்டாமல் உயிரிழந்த குழந்தை!!