பாலீத்தின் பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள்: ஒருவர் கைது!

பாலீத்தின் பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள்: ஒருவர் கைது!

பெங்களூரு: பெங்களூரில்,பெண் ஒருவரை கொலை செய்து உடல் பாகங்களை பாலீத்தின் பைகளில் போடு வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா, ஜனதா காலனியில் வசித்து வந்தவர் கீதம்மா (வயது 54). இவரது கணவர் இறந்து விட்டார். 2 மகள்களுக்கும் திருமணமாகி கணவருடன் வசிக்கின்றனர்.  இதன் காரணமாக ஜனதா காலனியில் கீதம்மா தனியாக வசித்து வந்துள்ளார். அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். 

கீதம்மா தனக்கு சொந்தமான 2 வீட்டில், ஒரு வீட்டில் தான் வசித்து வந்த நிலையில், மறு வீட்டை பீகாரை சேர்ந்த 3 பேருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார். கடந்த மாதம் (மே) 28-ந் தேதி கீதம்மா திடீரென்று மாயமானார். அதன்பிறகு, கடந்த 1-ந் தேதி கீதம்மாவின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஜனதா காலனியில் பல்வேறு இடங்களில் பாலிதீன் பைகளில் வைத்து வீசப்பட்டு இருந்தது.

இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.  கீதம்மா காணாமல் போன அதே நாளில் இருந்து அவரது வீட்டில் வாடகைக்கு இருந்த பீகாரை சேர்ந்த 3 பேரும் மாயமாகி இருந்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பெங்களூரு ஊரகம் காவல்துறை சார்பில் தலைமறைவாக இருந்த பங்கஜ் குமார்,இந்தல் குமார் மற்றும் கௌதம் குமார் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வந்தனர்.  இந்த மூன்று பேரில் தற்பொழுது பீகாரில் தலைமறைவாக இருந்த இந்தல் குமாரை காவல்துறை கைது செய்து பெங்களூரு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

காவல்துறை நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. கீதம்மா வீட்டில் பீகார் மாநிலம் அவுரங்கபாத் பகுதியை சேர்ந்த பங்கஜ் குமார் என்பவர் கடந்த 10 வருடங்களாக வசித்து வந்துள்ளார். இவருடன் அவரது சொந்த கிராமத்தை சேர்ந்த இந்தல் குமார் மற்றும் கௌதம் குமார் ஆகியோரும் வசித்து வந்த நிலையில் அனைவரும் பங்கஜ் குமார், கீதம்மாவுடன் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளார் மேலும் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்த பங்கஜ், ஒரு கட்டத்தில் தான் வசித்து வந்த வாடகை வீட்டை தன் பெயரில் எழுதி வைக்க அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.

இரண்டு வீடுகளும் தனது இரு மகள்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று கீதம்மா தெரிவித்து வந்த நிலையில், ஆத்திரமடைந்த அவர், தனது நண்பர்களுடன் கொலை செய்து, பாலீத்தின் பைகளில் போட்டு வீசிவிட்டு, பீகாருக்கே சென்று தலைமறைவு ஆகியுள்ளார்கள். 

மீதமுள்ள குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்பு அனைத்து உடல் பாகங்களும் விரைவில் மீட்க படும் என பெங்களூரு ஊரகம் காவல்துறை கண்காணிப்பாளர் பால் தண்டி தெரிவித்துள்ளார். தற்பொழுது தலைமறைவாக உள்ள ஆறு பேரின் மறைவிடங்கள் குறித்து உறுதியான தகவல்கள் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.