"இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் வரும்னு பாத்தா, கைது பண்ண போலீஸ் வந்திருக்கு" மனம் குமுறும் வாலிபர்!!

"இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் வரும்னு பாத்தா, கைது பண்ண போலீஸ் வந்திருக்கு" மனம் குமுறும் வாலிபர்!!

சமூக வலைதளத்தில் அதிக லைக் வாங்க ஆசைப்பட்டு திருவண்ணாமலையில் அரசு பஸ்சை வழிமறைத்து இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை ஓட்டி, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை போளூர் சாலை வழியாக அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜி, அந்த வழியாக வந்த அரசு பேருந்தை வழி மறித்து, தனது இரு சக்கர வாகனத்தில் ஆக்சிலேட்டர் முறுக்கி, டயரை சுழல வைத்து, அதிக அளவில் புகை வெளியேற்றி, அதன் பிறகு தனது இரு சக்கர வாகனத்தில் செல்வது போல், ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்

இந்த வீடியோ வைரல் ஆகியபோதிலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம், அவர் தனது பைக்கில் அலப்பறை செய்யும் பொழுது, அந்த வழியாக வந்த அரசு பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டதில், பின்னல் பெருமளவில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சமுக வலைத்தளங்களில் பரவி வந்த வீடியோ, காவலர்களின் கவனத்திற்கு செல்லவே, இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் பாலாஜி குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் இது குறித்து வீடியோவில் பதிவிட்ட பாலாஜி, சமூக வலைதளத்தில் லைக் வாங்க ஆசை பட்டு போலீசில் சிக்கி விட்டேன். ஆனால் எனக்கு லைக் வரவில்லை, போலீஸ் தான் வந்தது. எனவே யாரும் இது போன்ற செயலில் ஈடுபடும் வேண்டாம் என வேதனையுடன் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க || திமுக பிரமுகர் பட்டறை சரவணன் மீது வெறிச்செயல்... மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!