60 அடி கிணற்றில் காருடன் விழுந்த 3 நபர்கள் - சுயமாக உயிர் தப்பினர்

நாட்டறம்பள்ளி அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் காருடன் விழுந்த மூன்று பேர் கார் கண்ணாடிகளை உடைத்து கிணற்றில் இருந்து வெளியேறி சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

60 அடி கிணற்றில் காருடன் விழுந்த 3 நபர்கள் - சுயமாக உயிர் தப்பினர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் ராமச்சந்திரன், சுந்தர், ஆகியோர் தங்களது உறவினரான பாட்டி இறப்பிற்கு கூத்தாண்டகுப்பம் பகுதிக்கு மாருதி 800 காரில் மூன்று பேரும் சென்று உள்ளனர்.

மேலும் படிக்க | நீதிமன்றங்கள் மக்களின் நம்பிக்கைகுறியவையாக திகழ்கிறது - டி. ராஜா பேச்சு

அப்போது கூத்தாண்ட குப்பம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பொழுது காரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அருகே இருந்த 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது.

அப்போது சுதாரித்துக் கொண்ட மூன்று பேரும் கிணற்றில் உள்ளே செல்லும் பொழுது தண்ணீரில் கார் கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்தனர்.

பின்னர் கிணற்றில் இருந்து வெளியே வந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | ஹிஜாபை எதிர்க்கும் பாஜக அரசை கண்டித்து பிப்- 5 மாநாடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு அறிவிப்பு

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி பொக்லைன் இயந்திரம் மூலம் காரை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் காருடன் தவறி விழுந்து மூன்று பேர் உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது