865 லிட்டர் போலி மதுபானம் - நீதிபதி முன்னிலையில் தீயிட்டு அழிப்பு

865 லிட்டர் போலி மதுபானம் நீதிபதி முத்துக்கிருஷ்ணன் முரளி தாஸ், மதுவிலக்கு டிஎஸ்பி இளவரசன்,ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் தீயிட்டு அழிப்பு.

865 லிட்டர் போலி மதுபானம்  - நீதிபதி முன்னிலையில் தீயிட்டு அழிப்பு

சென்ற மாதம் கொட்டாம்பட்டியில் உள்ள பூபதி என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் போலி மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்டதாக  திருச்சி மாவட்டம் காணக்கிளியநல்லூரைச் சேர்ந்த மோகன் மற்றும் ரகுபதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்,
அங்கிருந்து  கைப்பற்றப்பட்ட 865 லிட்டர் போலி மதுபானங்கள்,மேலூர் அருகே உள்ள எம்.மலம்பட்டி மலை அடிவாரத்தில் தீயிட்டு அழிக்கப்பட்டது,

மேலும் படிக்க | 

ஹிஜாபை எதிர்க்கும் பாஜக அரசை கண்டித்து பிப்- 5 மாநாடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு அறிவிப்பு

மதுரை மாவட்டம் மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 865 லிட்டர் போலி மதுபானங்கள் நீதிபதி முத்துகிருஷ்ணன் முரளிதாஸ் முன்னிலையில் தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டது. 

கொட்டாம்பட்டி அருகே உதினிப்பட்டி கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூபதி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் போலி மதுபான ஆலை செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு இதில்20 கேன்களில் இருந்த  865 லிட்டர் போலி மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. மதுவிலக்கு டிஎஸ்பி இளவரசன் மதுவிலக்கு ஆய்வாளர் ஜெயந்தி முன்னிலையில் போலி மதுபான ஆலை நடத்தி வந்த ஜான்சன் மற்றும் அவரது நண்பர் மோகன்  ஆகியோரில் மோகன் மற்றும் தோப்பின் உரிமையாளர் பூபதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க | சாலை சரியில்லை!!!! சொந்த பைக்கை கொழுத்தி பரபரப்பு

 

இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட 865 லிட்டர் போலி மதுபானம் மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே மலம்பட்டி மலைஅடிவாரத்தில் இன்று தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டது. மதுவிலக்கு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.