கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்த கும்பல்...

நெய்வேலியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 8 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்த கும்பல்...

கடலூர் | நெய்வேலி வட்டம் 21-ல் வசித்து வரும் மணி, பிரசாந்த ஆகிய இரண்டு நபர்களும், அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்ற நபரை, முன்விரோதம் காரணமாக,  கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த  மகேஷ் தனது சக நண்பர்களான, அகிலன், நந்தா, மகேஷ், பார்த்திபன் ஆகியோருடன் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் கொலைவெறியுடன் சுற்றிக் கொண்டிருந்த நிலையில், இது பற்றி ரகசிய தகவல் காவல்துறையினருக்கு தெரியவே, மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் நடராஜன் தலைமையில்,  கடலூர் டெல்டா கிரைம் டீமும், உதவி ஆய்வாளர் அழகிரி தலைமையில் கிரைம் டீம் போலீசாரும், இரு பிரிவாக பிரிந்து, குற்றவாளிகளை தேடும்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நேற்றிரவு, நெய்வேலி வட்டம் 21-ல் இருந்த அகிலன் மற்றும் நந்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை செய்ய திட்டமிட்டதை பற்றியும், கொலைக்காக நாட்டு வெடிகுண்டுகள் தாயாரித்து இருப்பதை பற்றியும்,  காவல்துறையினரின் விசாரணை தெரிய வந்தது.

மேலும் படிக்க | வேகத்தால் மக்கள் உயிரிழந்த சோகம்...

பின்னர் கைது செய்யப்பட்ட  குற்றவாளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில்,  நெய்வேலி வட்டம் 4 -ல் உள்ள தோப்பில், பிளாஸ்டிக் பாக்கெட்டில் 8 நாட்டு வெடிகுண்டு இருப்பதை  காவல்துறையினர் கண்டுபிடித்து, பாதுகாப்பாக நாட்டு வெடிக்குண்டுகளை  கைப்பற்றினர். பின்னர் அகிலன் மற்றும் நந்தா மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக மகேஷ், பார்த்திபன், மணி, பிரசாந்த், இம்ரான் ஆகியோரை  தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை,  சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட bomp squad  போலீசார் நெய்வேலி வட்டம் 30-யில், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத,  காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஜேசிபி இயந்திரத்தின் மூலம், பள்ளம் தோண்டி, பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு, எட்டு நாட்டு வெடிகுண்டுகளையும் வெடிக்க செய்து, செயல் இழக்க செய்தனர்.

மேலும் படிக்க | லாக்கப்பில் போதை ஆசாமி பாடிய பாடல்... பாலிவுட்டில் கிடைத்த வாய்ப்பு...