தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்த சொகுசு கப்பல்...

துறைமுகத்திற்கு பகாமஸ் நாட்டு கப்பல் 698 பயணிகளுடன் வந்து சேர்ந்தது இவர்கள் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை பார்வையிடுகிறார்கள்.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்த சொகுசு கப்பல்...

தூத்துக்குடி | துறைமுகத்திற்கு பகாமஸ் நாட்டு கப்பல் 698 பயணிகளுடன் வந்து சேர்ந்தது. இவர்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை பார்வையிடுகிறார்கள்.

இவர்களை தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்து நமது இந்திய பாரம்பரிய முறைப்படி மேள-தாளத்துடன் பொய்க்கால் குதிரை உள்ளிட்ட இசை நடன    கலைஞர்களுடன் வ. உ. சி துறைமுக தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் வரவேற்ப்பு அளித்தனர்.

இந்த கப்பல் ஆனது கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்து புறப்பட்டு உள்ளது இந்த கப்பலில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 698 பேர் வந்துள்ளனர். இந்த கப்பலில் 386 கப்பல் ஊழியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உலகின் மிகப்பெரிய மிதக்கும் நூலகக் கப்பல்...

சுமார் 25 நாடுகளை இவர்கள் சுத்தி பார்க்க உள்ள நிலையில், நேற்று கேரள மாநிலத்தின் கொச்சின் துறைமுகம் வந்து அங்குள்ள சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு இன்று தூத்துக்குடி துறைமுகம் வந்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுகின்றனர்.

மேலும் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில், ஊசி கோபுரம் என்று அழைக்கப்படும் கிருத்துவ பேராலயம், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி சிவன் கோவில் உள்ளிட்ட பகுதிகளையும் தூத்துக்குடியில் உள்ள ஆஸ் துறை கல்லறை பார்வையிடுகிறார்கள்.

இவர்கள் வருகிற ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தங்களது சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு ஜெர்மனியில் தரை இறங்குகிறார்கள்.

மேலும் படிக்க | இந்தியா-வங்காளதேச நட்பு பைப்லைன் விரைவில் திறப்பு....முழு விவரம் சுருக்கமாக!!!