தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டி...! பதங்கங்களை வென்ற மாணவர்கள்..!

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டி...! பதங்கங்களை வென்ற மாணவர்கள்..!

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக சிறுவர்களுக்கு சிலம்ப கலையை ஊக்குவிக்கும் விதமாக பயிற்சியளிக்க வந்தவர் நாகுபாண்டி சேர்வைக்காரர் சிலம்பம் அகடாமியின் சிலம்ப பயிற்றுநர் அம்சவர்தன். இவர் அந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி அளித்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த 2, 3 ஆகிய தேதிகளில் கோவாவில் நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் மற்றும் எஜுகேஷன் பெடரேஷன் விளையாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் நாகுபாண்டி சேர்வைக்காரர் சிலம்பம் அகடாமியின் சிலம்ப பயிற்சியாளர் அம்சவர்தன் தலைமையில் சீனியர், ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் பிரிவுகளில் கலந்து கொள்ள 11 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் கலந்து கொண்ட 11 மாணவர்களில் ஒன்பது பேர் தங்க பதக்கமும், இருவர் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மாலை அணிவித்தும், பொன்னாடை போற்றியும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.