காற்று மாசைக் குறைக்க புதிய முயற்சி...! களத்தில் சென்னை மாநகராட்சி...!

காற்று மாசைக் குறைக்க புதிய முயற்சி...! களத்தில் சென்னை மாநகராட்சி...!

போகி பண்டிகையின் போது ஏற்படும் காற்று மாசை குறைக்க புதிய முயற்சியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த நாளில்,  பயன்படுத்திய பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள். இதன் காரணமாக சென்னையில் பெரிய அளவில் காற்று மாசு ஏற்படும். இதை தவிர்க்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கிறது. அந்த வகையில் போகியின் போது தீயிலிட்டு வீணாகும் துணியை தூய்மை பணியாளர்களிடம் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள கார்ட்டூன் காணொளியில், ஜனவரி 8 - 13 வரை தூய்மை பணியாளர்கள் அந்த துணிகளை பெற்று கொள்வார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது. இதன் மூலம் காற்று மாசு தவிர்க்கப்படுவதோடு, தேவைப்படுவோருக்கு அந்த துணிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் தகவல்...! தமிழ்நாடு அரசு அறிவிப்பு...!