ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவன்...! 2 ஆம் நாளாக தேடும் பணி தீவிரம்...!

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவன்...! 2 ஆம் நாளாக தேடும் பணி தீவிரம்...!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி.தேவனூர் பகுதியை சேர்ந்தவர் மூக்கையன். கூலி தொழிலாளியான இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் புவனேஷ்(15) என்கிற மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று மாலை புவனேஷ் தனது அப்பா மூக்கையன் மற்றும் நண்பர்களுடன்  தென்பெண்ணை ஆற்றில், வெள்ளப்பெருக்கில் தடையையும் மீறி தரைப்பாலத்தின் அருகே குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.  அப்போது நீரின் வேகம் அதிகரித்து புவனேஷ் மற்றும் அவரது அப்பா மற்றும் நண்பர் என நான்கு பேரும் ஆற்றில் அடித்து சொல்லப்பட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக மூன்று பேர் கரை ஏறி உயிர் தப்பியுள்ளனர். தரைப்பாலத்தின் அருகே உள்ள சுழல் பகுதியில் சிக்கி புவனேஷ் மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் தீயணைப்பு வீரர்கள் நேற்று மாலை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடியும் மாணவரின் உடலை மீட்க முடியவில்லை. மேலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும், இரவு நேரம் என்பதாலும், தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மறுபடியும் இன்று காலை தரை பாலத்தில் அடுத்து செல்லப்பட்ட மாணவனை தேடும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே தரைபாலத்தில் நேற்று இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் வெள்ளப்பெருக்கின்  போது தரைப்பாலத்திற்கு செல்லக்கூடாது, என பலமுறை ஒலிபெருக்கி மூலமாக ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், இரண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தடுப்புகள் அமைத்தும் இளைஞர்கள் குளிக்கச் செல்வதால் இதுபோன்ற விபத்துகள் நடப்பது தொடர் கதையாக உள்ளது.

இதையும் படிக்க : புதிய அப்டேட்டை வெளியிட்டது வாட்ஸ்அப்..!!! என்ன புதிய மாற்றம் தெரிந்துகொள்ளலாம்!!!