காவல் துறை வாகனங்களுக்கு நடந்த அதிரடி சோதனை...

காவல் துறை வாகனங்களுக்கு நடந்த அதிரடி சோதனை...

திருவள்ளூர் | காவல் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் ஊத்துக்கோட்டை பொன்னேரி கும்மிடிப்பூண்டி திருத்தணி ஆகிய உட்கோட்டங்களில் உள்ள 24 காவல் நிலையம், 5 மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, 5 அனைத்து மகளிர் காவல் நிலையம், ரோந்து வாகனம், கண்ணீர் புகை கூண்டு வீச்சம் வாகனம், நீர்வீச்சும் வாகனம், ஆயுதப் படை வாகனம் என மாவட்டத்துக்கு உட்பட்ட காவல்துறை வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க | 250 காளைகளை கண்டு களித்த 3000க்கும் மேற்பட்ட மக்கள்...

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாண் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது காவல்துறை வாகனங்களை பயன்படுத்தும் ஓட்டுநர்களிடம் வாகனங்களில் பயன்படுத்தும் கருவிகள், வாகன பராமரிப்பு புத்தகம் மற்றும் அதில் உள்ள குறைகளையும் கேட்டறிந்தார்.

மேலும் படிக்க | விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள மாற்றுத்திறனாளிகள் பாதை.......

குறைபாடு உள்ள வாகனங்களை உடனே பழுது நீக்கம் செய்யுமாறு ஆயுதப்படை ஆய்வாளர் உமா மகேஸ்வரிக்கு உத்தரவிட்டார். மேலும் 4 சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எவ்வித விபத்தும் ஏற்படாத வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வில் 4 சக்கர வாகனங்கள் 72 மற்றும் இருசக்கர வாகனங்கள் 30 மொத்தம் 102 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், மற்றும் ஆயுதப்படை காவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க | சுடுகாட்டை சமூக விரோதிகள் பயன்படுத்த முடியாத வகையில் நடவடிக்கை - மேயர் பிரியா உத்தரவு