மர்மமான முறையில் இறந்த யானை...! அதிகாரிகள் ஆய்வு...!

மர்மமான முறையில் இறந்த யானை...! அதிகாரிகள் ஆய்வு...!

குமரி மாவட்டம், மருதம்பாறை வனப்பகுதியில் ஆண் யானை மர்மமான முறையில் இறந்துள்ளது. அதற்கான காரணம் குறித்து களியல் வனத்துறை அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம் மேற்கு மலையோரப் பகுதியான, பத்துகாணி பகுதியில் கடந்த ஒரு சில வாரங்களாக பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விளைநிலங்களையும் ,வீடுகளையும் சேதபடுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று களியல் வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதம்பாறை, வனப்பகுதியில் காட்டுயானை கூட்டத்தில் உள்ள 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று காயங்கள் எதுவும் இன்றி மர்மாக இறந்துள்ளது. 

இதைப் பார்த்து, அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் களியல் வனச்சரக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று யானை இறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மேலும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து, பிரேத பரிசோதனை செய்த பின்பு தான் இறப்பிற்கான காரணம் குறித்து தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான நடவடிக்கைகளும் வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல இறந்த யானையின் உடல் அருகே  யானைகள் கூட்டமாக கூட்டமாக சுற்றித் திரிந்தும் வருகின்றன. யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு காட்டுப்பகுதியிலேயே அடக்கமும் செய்யப்பட உள்ளன.

இதையும் படிக்க : பாரம்பரியமிக்க கார்கள், மோட்டார் சைக்கிள் வாகனக் கண்காட்சி...! சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட டிஜிபி..!