நீலகிரியில் உணவு தேடி லாரிகளை வழிமறித்த யானை..!

நீலகிரியில் உணவு தேடி லாரிகளை வழிமறித்த யானை..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உணவு தேடி காட்டு யானை ஒன்று லாரிகளை வழிமறித்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டம்கோத்தகிரி மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றைக்காட்டு யானையின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக இருந்து வருகிறது சாலையில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானை சாலையோர கடைகளை முற்றுகையிடுவதும் வாகனங்களை வழி மறிப்பது தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி சென்ற இரண்டு லாரியை ஒற்றை காட்டு யானை திடீரென வழிமறித்தது. உடனே யானை வருவதை கண்ட லாரி ஓட்டுநர் வாகனத்தை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். பின்பு  லாரியில் நீண்ட நேரம் உணவைத் தேடிய காட்டு யானை அதில் இருந்த பொருட்களை தும்பிக்கையால் இழுத்தது. இதனால் மலைப்பாதையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதோடு, நீண்ட நேரம் யானை சாலையிலேயே நின்றதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. அதன் பின்பு, யானை வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகனங்கள் சென்றன. அடிக்கடி ஒற்றைக் காட்டு யானை சாலையில் உலா வந்து வாகனங்களை வழிமறிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

எனவே வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வேறு அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க     |