அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மயான கொள்ளை விழா...

அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மயான கொள்ளை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மயான கொள்ளை விழா...

கள்ளக்குறிச்சி | திருக்கோவிலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது 100 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத அமாவாசை அன்று மயான கொள்ளை பெருவிழா விமரிசையாக நடைபெறுவது, வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த இந்த திருவிழாவானது, இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.

மேலும் படிக்க | மகா சிவராத்திரியையொட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது நாட்டியாஞ்சலி விழா...!

மயான கொள்ளை பெருவிழாவில் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் என்று பக்தர்கள் அம்மனின் பல்வேறு அவதாரங்கள் இட்டு மயான கொள்ளை பெருவிழாவில் கலந்து கொள்வர்.

இந்த ஆண்டு நடைபெற்ற இன்று நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களும், வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது வழக்கம்.

மேலும் படிக்க | தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட மகா சிவராத்திரி...!

மேலும், அம்மன், பத்ரகாளி, சூரி, பரமேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து ஏரிக்கரை மூலை பகுதியில் இருந்து தென்பெண்ணை ஆறு வரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இந்த நிகழ்வைக்கான திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

இந்த நிகழ்வை ஒட்டி திருக்கோவிலூர் உட்கோட்ட போலீசார் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | முதலமைச்சரை சந்தித்த போது - நாடக காதல் தொடர்பாக இப்போது பேச விரும்பவில்லை பாமக பேச்சு