நிர்வாகத்திற்கு எதிராக மறுப்பு போராட்டம் நடத்திய அசோக் லேலண்ட் ஊழியர்கள்...

விடுமுறை நாட்களில் வேலை செய்ய வேண்டும் என நிர்வாகம் வலியுறுத்தியதை எதிர்த்து அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் மறுப்பு போராட்டம் நடத்தினர்.

நிர்வாகத்திற்கு எதிராக மறுப்பு போராட்டம் நடத்திய அசோக் லேலண்ட் ஊழியர்கள்...

கிருஷ்ணகிரி | ஒசூர் அசோக் லேலண்ட் யூனிட் 1-மற்றும் 2 ல் தொழிற்சாலைகளில் ஞாயிறு விடுமுறை தினங்களில் பணி செய்ய வேண்டுமென நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிரந்த தொழிலாளர்கள் சுமார் 2150 பேர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிர்வாகம் இன்று வேலை நாட்களாக அறிவித்து வியாழக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், நிரந்தர தொழிலாளர்கள் விடுமுறை தினங்களில் இரட்டிப்பு ஊதிய வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து மற்ற ஒப்பந்த தொழிலாளர்களையும் வேலைக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | இந்தி எதிர்ப்பு....! அன்று முதல் இன்று வரை!! நீளும் மொழிப்போர் தியாகிகள் பட்டியல்!

இதனால் இங்கு 5000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வெளியில் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு நிரந்தர தொழிலாளர்கள் வற்புறுத்தலின் அடிப்படையில் அவர்களும் தற்போது வீடு திரும்பி உள்ளனர்.

இது குறித்து சங்க செயலாளர் சக்திவேல் தெரிவிக்கையில், 

விடுமுறை தினங்களில் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் அதே சமயம் நிரந்தர பணியிடங்களில் நிரந்தர தொழிலாளர்களை பணி வழங்க வேண்டும் ஆனால் நிர்வாகம் தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர் எனவே இதை கண்டிக்கும் வகையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்

மேலும் படிக்க | மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர்...மடக்கி பிடித்த போலீசார்...உத்தரவிட்ட நீதிமன்றம்!