தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்...

கோவில்பட்டியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்...

தூத்துக்குடி | கோவில்பட்டி நகராட்சி பகுதியில் தமிழக அரசினால் தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தபடுகிறதா அல்லது விற்பனை செய்யபடுகிறதா என்பது கூறி நகராட்சி சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்க்கொண்டனர்.

கோவில்பட்டி அண்ணாபஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதார துறை அலுவலகள் ஆய்வு மேற்க்கொண்ட போல பல கடைகளில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தபடுவது தெரிய வந்ததது.

இதையெடுத்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர் மேலும் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த ஒவ்வொரு கடைகளுக்கும், ரூ 200 அபராதம் விதித்தனர். தொடர்ந்து பயன்படுத்தினால் கடைக்கு சீல் வைப்போம் என நகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | பல் மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்...