கூடைப்பந்தாட்ட போட்டி - போடி அணியினர் வெற்றி...

மூன்று நாட்கள் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் போடி கூடைப்பந்தாட்ட கழக அணியினர் 63 புள்ளிகளுக்கு 58 என்ற புள்ளி கணக்கில் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

கூடைப்பந்தாட்ட போட்டி - போடி அணியினர் வெற்றி...

தேனி | போடி ஜ.கா.நி மேல்நிலைப் பள்ளியில்   இரவு பகலாக மூன்று நாட்கள் நடைபெற்ற கூடை பந்தாட்ட போட்டியில் 18 அணிகள் பங்கு பெற்றனர். முதல் நாள் போட்டி நாக் அவுட் போட்டிகளாகவும் இரண்டாம் நாள் போட்டி லீக் மற்றும் அரை இறுதி போட்டிகளாகவும் மூன்றாம் நாள் இறுதி போட்டியாகவும் நடைபெற்றது.

இந்த போட்டியில் போடி கூடைப்பந்தாட்ட கழக அணியினர்  இறுதிப் போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி அணியினரை 63- 58   புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர். 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போடி கூடை பந்தாட்ட கழக அணிக்கு 20000 ரூபாய் ரொக்கப்பறசும் கோப்பையும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்த்த திமுக இப்போது... ஆசிரியர் பணிக்கான அரசாணை எண் 149 ரத்து செய்ய வேண்டி பாமக அறிக்கை

இரண்டாம் இடத்தை பிடித்த பெரியகுளம் சில்வர் ஜூப்ளி அணியினருக்கு 15000 ரூபாய் ரொக்கமும் கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக விளையாடிய  வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் முதல் பரிசையும் போடி நகர செயலாளர் புருஷோத்தமன் இரண்டாம் பரிசையும்  போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜேஸ்வரி சங்கர் மூன்றாம் பரிசையும் வழங்கினர்.

மேலும் படிக்க | தேர்வு அட்டவணையை வெளியிட்ட சிபிஎஸ்இ...!!!