ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த சிறுவன்...! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை..!

ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த சிறுவன்...! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை..!

கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது 11 வயது மகன் அஸ்வின். அதங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 24 ம் தேதி தேர்வு எழுதுவதற்க்காக பள்ளிக்கு சென்றுவிட்டு தேர்வு முடிந்து வீட்டிற்கு தும்பிக்கொண்டிருக்கும் போது, அங்கு அதே பள்ளி சீருடையில் வந்த மாணவன் ஒருவன், 6 ம் வகுப்பு மாணவனிடம் குளிர்பானம் ஒன்றை கொடுத்து குடிக்க கூறி உள்ளார். அதனை அந்த சிறுவனும் நம்பி குடித்து கொண்டிருந்த போது பின்னால் இருந்து ஓடி வந்த சிறுவன் ஒருவன் மோதி உள்ளான் இதில் குளிர்பான பாட்டில் கீழே விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த மாணவன் வழக்கம்போல் வீட்டிற்கு வந்துள்ளார். 

பின்னர் வீட்டிற்கு வந்த சிறுவனுக்கு, இரவில் திடீரென குளிர் காய்ச்சல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இருப்பினும் சிறுவனுக்கு காய்ச்சல் குறையவில்லை. மேலும் சிறுவனின் வாய், நாக்கு உள்ளிட்ட பகுதிகளில் புண்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் மேல் சிகிச்சைக்காக சிறுவனை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் அருந்திய குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியதோடு சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருப்பதாக தெரிவித்தனர். 

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர், களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகம் சிசிடிவி பதிவுகளை கொடுக்காமல் இழுத்தடிப்பதாக குற்றசாட்டை எழுப்பி உள்ளனர் .