நீதிமன்றங்கள் மக்களின் நம்பிக்கைகுறியவையாக திகழ்கிறது - டி. ராஜா பேச்சு

மக்கள் வழிபாட்டு தளங்களுக்கு சென்றாலும் வழிபாட்டு தலங்களில் ஏற்படும் பிரச்சினைகளை நீதிமன்றம் தான் தீர்ப்பு அளிப்பதாகவும், நீதிமன்றங்கள் மக்களின் நம்பிக்கைகுறியவையாக திகழ்கிறது என புதுச்சேரியில் நடைபெற்ற சட்ட நாள் விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் (பொறுப்பு) தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு

நீதிமன்றங்கள் மக்களின் நம்பிக்கைகுறியவையாக திகழ்கிறது - டி. ராஜா பேச்சு

புதுச்சேரி வழக்கறிஞர் சார்பில் 73வது சட்ட நாள் தனியார் நட்சத்திர விடுதியில் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, முதல்வர் ரங்கசாமி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தலைவர் அமல்ராஜ், சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், புதுச்சேரி நீதிமன்ற தலைமை நீதிபதி செல்வந்தன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | 865 லிட்டர் போலி மதுபானம் - நீதிபதி முன்னிலையில் தீயிட்டு அழிப்பு

முன்னதாக விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி,
புதுச்சேரி மாநில மக்களுக்கு தேவையானதை அரசு செய்து கொண்டிருப்பதாகவும்,
வழக்குகளில் நீதி விரைவாக கிடைக்க வேண்டும் என்பது மக்களின் எண்ணம் என்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் அதற்கு நீதியரசர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என தெரிவித்த அவர் 
மக்களுக்கு நலத்திட்டம் வழங்குவதில் சிறந்த  எடுத்துக்காட்டான மாநிலமாக புதுச்சேரி உள்ளதாகவும் பெருமிதம் கொண்டார் தொடர்ந்து பேசிய அவர்
ரூ.14 கோடி நிதி ஒதுக்கு புதிய வழக்கறிஞர்கள் சங்கற்றின் கட்டிடம் கட்டித்தரப்படும் என்றும்
நீதித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்த அவர்
கடந்த 5 ஆண்டுகளில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில்  தற்போது அரசு பொருப்பேற்ற பிறகு விரைவாக அரசு காலி இடங்களை நிரப்பு வருகிறது என்றார்.

மேலும் படிக்க | 85% வாக்குறுதிகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றம்”...செந்தில் பாலாஜி விளக்கம்


முதல்வரை தொடர்ந்து பேசிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு)-டி.ராஜா
 மக்கள் வழிபாட்டு தளங்களுக்கு சென்றாலும் வழிபாட்டு தலங்களில் ஏற்படும் பிரச்சினைகளை நீதிமன்றம் தான் தீர்ப்பு அளிப்பதாகவும், நீதிமன்றங்கள் மக்களின் நம்பிக்கைகுறியவையாக திகழ்கிறது என்றும்
வழக்கறிஞர் சுயலாப நோக்குடன் அனுக கூடாது என அறிவுறுத்திய அவர்  நீதியை நிலை நாட்டும் வகையில் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும் என்றும் தவறான வழக்கில் வரும் லாபத்தை கணக்கில் கொள்ளாமல் 
வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.